பால் தொழில்நுட்பம் பயில எங்களிடம் வாங்க!

கல்வி

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த அலமாதி- கொடுவேளி எனும் பகுதியில் இயங்கி வருகிறது, உணவு மற்றும் பால் வளத் தொழில்நுட்பக் கல்லூரி. இது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது. 82 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கல்லூரியில் சொல்லிக்கொடுக்கப்படும் படிப்புகள் குறித்துக் கல்லூரி முதல்வர் முனைவர் த.பாஸ்கரனிடம் பேசினோம்.

“2006-ம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகள் படிப்பான பி.டெக் (உணவு தொழில்நுட்பம்) படிப்புப் பயிற்றுவிக்கப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் பி.டெக் (பால்வளத் தொழில்நுட்பம்) படிப்புப் பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும், உணவுத் தொழில்நுட்பத் துறையில் எம்.டெக் மற்றும் பி.எச்.டி முதலிய ஆராய்ச்சி படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் 2008-ம் ஆண்டு இப்பட்டப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை வழங்கியது. தேசிய வேளாண் ஆராய்ச்சிக் குழுவும் 2016-ம் ஆண்டு இப்பட்டப் படிப்புகளை அங்கீகரித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick