40 ஆடுகள், ரூ. 3 லட்சம்... வெள்ளாடுகள் கொடுக்கும் வெகுமதி! | Profitable Goat farming - Pasumai Vikatan | பசுமை விகடன்

40 ஆடுகள், ரூ. 3 லட்சம்... வெள்ளாடுகள் கொடுக்கும் வெகுமதி!

கால்நடை

நகர வாழ்க்கையில் கை நிறையச் சம்பாதித்தாலும்... பெரும்பாலானோரின் அடிமனதில் ஓடிக்கொண்டிருப்பது நமது ஆதித்தொழிலான விவசாயமும், கால்நடை வளர்ப்பும்தான். அதனால்தான் பெருநகரங்களில் வசிக்கும் பெரும்பாலானோர் மாற்றுத்தொழிலாக விவசாயத்தை முன்னெடுக்கிறார்கள். அத்தகையோரில் ஒருவர்தான், சென்னையைச் சேர்ந்த  ஜேசுராஜ் சந்தியாகு. திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனம் நடத்திவரும் இவர், காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரிக்கு அருகிலுள்ள ஒத்திவாக்கம் கிராமத்தில் ஆட்டுப்பண்ணை அமைத்துள்ளார்.

ஒரு காலைவேளையில் பண்ணையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த  ஜேசுராஜ் சந்தியாகுவைச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick