உச்ச நீதிமன்ற உத்தரவு...முடங்கும் முட்டைக்கோழிப் பண்ணைகள்!

பிரச்னை

‘கூண்டுகளில் அடைக்கப்பட்டு முட்டைக்கோழிகள் துன்புறுத்தப்படுகின்றன. அதனால், கூண்டுகளில் கோழிகளை வளர்ப்பதைத் தடை செய்ய வேண்டும்’ என்று ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கூண்டுகளுக்குள் கோழிகளை வளர்க்க இடைக்காலத்தடை விதித்துள்ளது. இந்தத் தடை உத்தரவை உடனடியாக அமல்படுத்தும் வகையில், கால்நடை பராமரிப்புத்துறை அனைத்துக் கோழிப் பண்ணையாளர்களுக்கும் எச்சரிக்கை கடிதம் அனுப்பி வருகிறது. இந்த விவகாரம், இந்திய அளவில் முட்டை உற்பத்தியாளர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து, தேசிய முட்டை உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழ்நாடு மண்டலத்தலைவர் டாக்டர் செல்வராஜிடம் பேசினோம். “கடுமையான வறட்சி நிலவும் மாவட்டங்களில் நாமக்கல் முதலிடத்தில் இருக்கிறது. விவசாயம் பொய்த்துப்போன சூழ்நிலையில் பிழைப்பைத்தேடி புலம்பெயர்ந்து போகாமல்... சொந்த நிலத்தில் உப தொழிலாகத் தொடங்கப்பட்ட கோழிப்பண்ணைத்தொழில், இப்பகுதி மக்களின் கடும் உழைப்பால் இன்று பிரதான தொழிலாக உருவாகி, நாமக்கல் மாவட்டத்துக்குப் பெருமை சேர்த்து வருகிறது. இப்பகுதியில் ஐந்து கோடியே இருபத்தைந்து லட்சம் முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. ஆந்திரா, தெலங்கானா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருபது கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick