வெண்பன்றி தரும் வெகுமதி... 35 தாய்ப்பன்றிகள்... ஆண்டுக்கு ரூ. 9 லட்சம்!

கால்நடை

குறைந்த காலத்தில் அதிக வருமானம் தரக்கூடிய கால்நடைகளில் வெண்பன்றிகள் முக்கியமானவை. வெண்பன்றி வளர்ப்பு குறித்த விழிப்பு உணர்வு காரணமாக, தமிழகத்தில் பன்றிப்பண்ணைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தமிழகத்தில் வெண்பன்றி வளர்ப்பில் ஈடுபட்டு வருபவர்களில் பெரும்பாலானோர்... சோதனை அடிப்படையில் வளர்க்கத் தொடங்கி அதில் கிடைக்கும் லாபத்தைக் கண்கூடாக உணர்ந்த பிறகு பண்ணையை விரிவுபடுத்தியவர்கள்தான். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன். இவர், 10.2.2017-ம் தேதியிட்ட ‘பசுமை விகடன்’ இதழில் வெளிவந்த ‘அன்று கல்லுக்கொல்லை... இன்று நெல்லுக்கொல்லை’ என்ற கட்டுரை மூலம் வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான்.

புதுக்கோட்டை மாவட்டம், ராயப்பட்டியில் அமைந்துள்ளது, இவருடைய வெண்பன்றிப் பண்ணை. ஒரு பகல்பொழுதில் பண்ணையில் இருந்த கண்ணனைச் சந்தித்தோம். கொட்டகைக்கு அழைத்துச் சென்று பன்றிகளைக் காட்டியபடியே பேச ஆரம்பித்தார், கண்ணன். “பன்றிகளுக்குப் புத்திக்கூர்மை அதிகம். இதுகளுக்குச் சாப்பாடு கொண்டு வர்ற வேன் ஹாரன் சத்தம் கேட்டதுமே படுத்துருக்குற பன்றிகளெல்லாம் எந்திரிச்சு சத்தம் கொடுக்க ஆரம்பிச்சுடும். கழிவுகளை ஒரே இடத்துலதான் வெளியேத்தும்” என்று பன்றிகளைப் பற்றிப் பெருமையாகச் சொன்ன கண்ணன் தொடர்ந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick