சமவெளியிலும் சிறப்பாக வளரும் சீத்தா... சோதனை முயற்சி... சாதனை மகசூல்!

மகசூல்

பழங்களில் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது சீத்தாப்பழம். இப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே மருத்துவப் பண்புகளைக் கொண்டது. ஆனாலும், இதை மற்ற பழ மரங்களுக்கிடையே ஊடுபயிராகவோ வரப்புப் பயிராகவோத்தான் பலரும் சாகுபடி செய்கிறார்கள். குறிப்பாக மலையடிவாரப் பகுதிகளில்தான் அதிகமாக இது விளைவிக்கப்படுகிறது. இந்நிலையில், சீத்தாப்பழத்தைச் சமவெளிப்பகுதியில் சோதனை முயற்சியாக, தனிப்பயிராகச் சாகுபடி செய்து நல்ல மகசூல் எடுத்து வருகிறார், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி.

விருதுநகரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூலக்கரை எனும் கிராமத்தில் இருக்கிறது, பாலாஜியின் தோட்டம். சீத்தாப்பழ அறுவடைப்பணியில் ஈடுபட்டிருந்த பாலாஜியைச் சந்தித்தோம்.

“பரம்பரை விவசாயக் குடும்பம்தான் எங்களோடது. தாத்தா, அப்பா எல்லோரும் விவசாயம்தான் செஞ்சாங்க. நான், படிப்பை முடிச்சுட்டு ஒரு தனியார் நிறுவனத்துல வேலை செய்துகிட்டே விவசாயத்தையும் பார்த்துட்டுருக்கேன். தாத்தா காலத்தில் பருத்தி, மக்காச்சோளம்னு ரசாயன விவசாயம்தான் செஞ்சுட்டுருந்தோம். நான் விவசாயத்துக்கு வந்ததும்தான் இயற்கை முறையில செய்ய ஆரம்பிச்சேன். ஒரு நண்பர் மூலமா ‘பசுமை விகடன்’ புத்தகம் எனக்குக் கிடைச்சது. தொடர்ந்து அதைப்படிச்சுதான் இயற்கை விவசாயம் செஞ்சுட்டுருக்கேன்”  என்று முன்கதை சொன்ன பாலாஜி தொடர்ந்தார்... “இது மொத்தம் 6 ஏக்கர் கரிசல் மண் நிலம். இரண்டரை ஏக்கர் நிலத்துல கொய்யா இருக்கு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick