ஒரு ஏக்கர், 3 மாதங்கள்... தித்திப்பான லாபம் தரும் மானாவாரி தினை!

மகசூல்

“தேனும் தினைமாவும் தின்ற சுவையால்

தினைப்புனம் நாடியே சென்றான்” - எனத் தினைப்புனம் காத்த வள்ளியைத் தமிழ்க்கடவுளாம் முருகப்பெருமான் தேடிச் சென்றதைக் குறித்துப் பாடி வைத்துள்ளனர், நம் முன்னோர். அந்தளவுக்குச் சுவையானதும், உடலுக்கு உறுதியைத் தரக்கூடியதுமான தினை, தன்னைப் பயிரிடுவோருக்கும் வஞ்சகமில்லாமல் வருமானத்தை வழங்கி வருகிறது. அதனால்தான், மானாவாரி விவசாயிகள் பலரும் தொடர்ந்து பருவம் தவறாமல் தினையைச் சாகுபடி செய்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அழகர்சாமி.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, புலிப்பாறைப்பட்டி எனும் கிராமம். இங்குதான் அழகர்சாமியின் மானாவாரி நிலம் இருக்கிறது. நாம் அவரைச் சந்திக்கச் செல்வது குறித்து முன்கூட்டியே தெரிவித்திருந்ததால், புலிப்பாறைப்பட்டி கிராமத்து விலக்கில் காத்திருந்து நம்மை அழைத்துச் சென்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick