ஏன்... ஏன்? தெரிவோம்... தெளிவோம்! - 2 - பயிர்களைப் பாதுகாக்கும் தற்கொலைப்படை!

கேள்வி-பதில்

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை விவசாயிகளுக்குக் கற்றுத்தருவதற்காக ‘உலக உணவு மற்றும் வேளாண் கழகம்’ சில வேளாண்மை அலுவலர்களுக்குப் பயிற்சியளித்தது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த உதவி வேளாண்மை இயக்குநரும் பூச்சியியல் வல்லுநருமான நீ.செல்வமும் ஒருவர். பல மாநிலங்களிலுள்ள வேளாண் அலுவலர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்புத் தொடர்பான பயிற்சியளித்து வருகிறார், நீ.செல்வம். ‘பசுமை விகடன்’ வாசகர்களுக்காக, ஐ.பி.எம் (IPM-Integrated Pest Management) தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை முதன்முதலில் செயல்படுத்திய நாடு எது?

1970-களில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தோனேசியாவில்தான் இத்தொழில்நுட்பம் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.

இந்தோனேசியாவில் நெல் விவசாயம் அதிகளவு நடைபெற்று வந்த காலகட்டம் அது. பூச்சிக்கொல்லி பயன்பாட்டுக்கு வந்தவுடன் அந்நாட்டு விவசாயிகள் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். நாற்று நடவுசெய்த பத்தாவது நாளிலிருந்து முறைவைத்து பூச்சிக்கொல்லித் தெளித்தார்கள். அதிகப் பயன்பாடு காரணமாகப் பூச்சிகளின் பெருக்கம் அதிகமானது. அங்கு நெல் பயிரில் இலைச்சுருட்டுப்புழு மட்டுமே முதலில் பிரச்னையாக இருந்தது. அடுத்து குருத்துப்பூச்சி வந்தது. அடுத்து புகையான் வந்தது. ஒரு கட்டத்தில் இவை மூன்றும் சேர்ந்து மிகப்பெரிய பிரச்னையாக மாறின. அதனால், உணவு உற்பத்தி கேள்விக்குறியானது. அக்காலகட்டத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, புதுமையான தொழில்நுட்பமாக அறிமுகப் படுத்தப்பட்டது, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick