மண்புழு மன்னாரு: தாய்லாந்து செல்போனும் சல்லிசான மாந்தோப்பும்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மாத்தியோசிஓவியம்: வேலு

சின்னச் சின்ன விஷயங்களைக் கவனமா செய்தா, பெரிய செயல்கள் வெற்றியா அமையும். சில வருஷங்களுக்கு முன், தாய்லாந்து நாட்டுல நடந்த இயற்கை விவசாயம் சம்பந்தமான பயிலரங்குக்குப் போயிருந்தேன். தாய்லாந்து நாட்டைப் பத்தி, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அபிப்ராயம் இருக்கும். எனக்கு அங்க நடக்குற இயற்கை விவசாயத்து மேலயும், அந்த நாட்டுல தயாரிக்கிற செல்போன் மேலயும் தனிமரியாதை உண்டு. ஏன்னா, நோக்கியா செல்போன் வந்த ஆரம்பகாலக்கட்டத்துல, தாய்லாந்து நாட்டுல தயாரிச்ச செல்போனைத்தான், இந்தியாவுல விற்பனை செய்தாங்க. எத்தனை முறை, கீழே போட்டு எடுத்தாலும், கல்லு மாதிரி உடையாம உழைச்சது. அதுக்குக் காரணம், தாய்லாந்து நாட்டுத் தயாரிப்புதான். இதனாலயே, தாய்லாந்து போனா, ஒரு நல்ல ஸ்மார்ட் போன் வாங்கணும்னு திட்டம் வைச்சிருந்தேன். அதுக்கான வாய்ப்பாக இந்தப் பயிலரங்கு அமைஞ்சது.

பல நாட்டுல இருந்தும், பயிலரங்குக்கு வந்திருந்தாங்க. (வாய்ப்பு கிடைக்கும்போது, விவசாயப் பயிரலங்குல நடந்த விஷயங்களையும் செல்றேன்) நிகழ்ச்சி முடிஞ்ச கையோடு ஒவ்வொருத்தரும் தாய்லாந்து நாட்டோட தலைநகரைச் சுத்திப்பார்க்க கிளம்பிட்டாங்க. நான் மட்டும், நல்ல ஸ்மார்ட் போன் எந்தக் கடையில விக்கும்னு தேடி தேடி அலைஞ்சேன், கடைசில  நல்ல செல்போனை வாங்கினேன். சென்னைக்கு வந்தவுடனே, ஸ்பென்சர் பிளாசாவுல சுத்தி அலைஞ்சி, செல்போனுக்குத் தோதா, ஒரு கவரையும் வாங்கிப்போட்டேன். ரெண்டு, மூணு நாள் போன் அற்புதமா வேலை செஞ்சுது. நாலாவது நாள், செல்போன் சூடாக ஆரம்பிச்சது. சரி, எல்லாச் செல்போனும் பேசுனா சூடாகும்தானேனு சமாதானப்படுத்திக்கிட்டேன். ஆனா, பாருங்க... அந்தத் தாய்லாந்து செல்போன், துணியைத் தேய்க்கிற இஸ்திரிப் பெட்டி கணக்கா சூடாக ஆரம்பிச்சது. அப்புறம் செல்போன்ல யாராவது கூப்பிட்டாலே, எனக்குச் சூடாக ஆரம்பிச்சது. இப்படியே ஒரு வாரம் போனது. ஆசை ஆசையாய் வெளிநாட்டுல வாங்குன போன், இப்படிப் பண்ணுதேன்னு வருத்தமா இருந்துச்சி. தாய்லாந்து நாட்டு செல்போன் கம்பெனிக்கு, இ.மெயில் அனுப்பித் தகவலைச் சொன்னேன். ‘பிரச்னை ஒண்ணும் கிடையாது. உங்க செல்போனைத் தாய்லாந்துக்கு அனுப்பி வைங்க, பழுது பார்த்து தர்றோம்’னு பதில் வந்துச்சி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick