தண்ணீர் - அறிவியல் + அரசியல் + அழிவியல் - 16 - காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்கு... இனி கானல் நீர்தானா? | Science and politics behind water and its resource - Pasumai Vikatan | பசுமை விகடன்

தண்ணீர் - அறிவியல் + அரசியல் + அழிவியல் - 16 - காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்கு... இனி கானல் நீர்தானா?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தண்ணீர்’பொறிஞர்’ அ.வீரப்பன்

மிழக நீர்வளங்களின் முக்கியத்துவமும், அவற்றின் அழிவும், மீட்டுருவாக்கமும், அதைச் சார்ந்த அரசியல் பிரச்னைகளைப் பற்றியும் பேச இருக்கிறது, இத்தொடர். நீர்வளங்களைப் பாதுகாக்கவும் அதை மீட்டெடுக்கவும் தூண்டுகோலாக இந்தப் பகுதி அமையும்.

மேட்டூர் அணையிலிருந்து 184 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது, முக்கொம்பு மேலணை. இங்கிருந்துதான் காவிரி இரண்டாகப் பிரிந்து கொள்ளிடம், காவிரி எனப் பயணிக்கிறது. அடுத்ததாக, கல்லணையிலிருந்து... காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக் கால்வாய் என நான்காகப் பிரிகிறது. இதில் கொள்ளிடம் ஆற்றில் குறைவான தண்ணீர்தான் வெளியேறும். காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றின் வழியாகச் செல்லும் தண்ணீர் மூலமாகத்தான் கடைமடைப்பகுதி விவசாயிகள் பலனடைந்து வருகின்றனர். ‘இதுவரை தண்ணீர் திறக்கவில்லை’ எனப்போராடி வந்த காவிரி டெல்டா விவசாயிகள், இந்த முறை வரலாற்றிலேயே முதன்முறையாக... ‘திறந்துவிட்ட தண்ணீர் எங்களுக்கு வரவில்லை’ என்று போராடி வருகிறார்கள். மானமுள்ள ஆட்சியாளர்கள்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick