மரத்தடி மாநாடு: பெட்ரோல், டீசலுக்கு மானியம் கிடைக்குமா? - எதிர்பார்ப்பில் விவசாயிகள்!

ஓவியம்: வேல்

ருவத்துக்கு வந்திருந்த பசுமாட்டைப் பொலிகாளையுடன் இனச்சேர்க்கை செய்துவிட்டுத் தோட்டத்துக்குக் கூட்டிச் சென்று கொண்டிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். வியாபாரத்தை முடித்துவிட்டு வந்து கொண்டிருந்த ‘காய்கறி’ கண்ணம்மாவும் ஏரோட்டியுடன் இணைந்து கொண்டார். கண்மாய்ப் பாதையிலிருந்து தோட்டத்துக்குத் திரும்பும் இடத்தில், மிதிவண்டியில் வந்து கொண்டிருந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் அவர்களோடு இணைந்துகொள்ள... நாட்டு நடப்புகளைப் பேசிக்கொண்டே நடக்க ஆரம்பித்தனர்.

நடந்துகொண்டே ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார், வாத்தியார். “டீசல் மோட்டார்ல இயங்குற படகு வெச்சுருக்குற மீனவர்களுக்கு டீசல் வாங்குறதுக்கு அரசாங்கம் மானியம் கொடுக்குது. அதே மாதிரி, விவசாயிகளுக்கும் பெட்ரோல், டீசலுக்கு மானியம் கொடுக்கணும்னு விவசாயிகள் கேட்க ஆரம்பிச்சுருக்காங்க. டிராக்டர், பவர் டில்லர், ஸ்பிரேயர், பிரஷ் கட்டர்னு நிறைய இயந்திரங்கள் மானிய விலையில் கிடைக்கிறதால, ஏராளமான விவசாயிகள் இந்த மாதிரி இயந்திரங்களைப் பயன்படுத்த ஆரம்பிச்சுருக்காங்க. இந்த இயந்திரங்கள் எல்லாமே பெட்ரோல் அல்லது டீசல்ல இயங்குற இயந்திரங்கள்தான். இப்போ பெட்ரோல், டீசல் விலையெல்லாம் உச்சத்துல இருக்குறதால, விவசாயிகளுக்கு அதிகச் செலவாகுது. அதனால, விவசாயிகளுக்கும் மானியம் கொடுக்கணும்னு கேட்க ஆரம்பிச்சுருக்காங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே மூவரும் தோட்டத்துக்குள் நுழைந்துவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick