கட்டாயமாக்கப்படும் ‘ஆர்கானிக் சான்றிதழ்’ - கலக்கத்தில் இயற்கை விவசாயிகள்! | Certification is Mandatory for Organic Foods - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/09/2018)

கட்டாயமாக்கப்படும் ‘ஆர்கானிக் சான்றிதழ்’ - கலக்கத்தில் இயற்கை விவசாயிகள்!

பிரச்னை

மத்திய அரசு கொண்டு வந்துள்ள உணவு தர நிர்ணய சட்டப்படி... ‘மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றுள்ள நிறுவனங்களிடமிருந்து ‘அங்கக வேளாண்மைச் சான்றிதழ்’ (ஆர்கானிக் சர்டிபிகேட்) பெற்றுள்ளவர்கள் மட்டுமே இந்தியாவில் இயற்கை விவசாய விளைபொருள்களை விற்பனை செய்ய முடியும்’ என்ற விதிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது, மத்திய அரசு. இச்சான்றிதழ் இல்லாத இயற்கை விளைபொருள்களை விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்று சொல்லப்படுகிறது. அதோடு, தற்போது நடைமுறையிலுள்ள ‘இந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு’ வழங்கக்கூடிய அங்ககச் சான்றிதழ் இனி செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு இயற்கை விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.