காற்றில் கலந்த மரங்களின் காதலன்!

அஞ்சலி ‘அறச்சலூர்’ ரா.செல்வம்

தொலைபேசியில் நாம் அவரை அழைத்தாலும் சரி... அவர் நம்மை அழைத்தாலும் சரி... ‘வாழ்க மரங்களுடன்... நான் மரம் பேசுகிறேன்’ என்று கணீர் குரலில் சொல்லிவிட்டுத்தான் பேச்சை ஆரம்பிப்பார். அந்தக் கணீர் குரலை இனி நாம் கேட்க முடியாது. ஆம், அந்தக் கணீர் குரலுக்குச் சொந்தக்காரரான ‘மரம்’ தங்கசாமி, 81 வயது நிறைவுற்ற நிலையில்... கடந்த செப்டம்பர் 16-ம் தேதி, இயற்கையோடு கலந்துவிட்டார். ‘மரம் நடு... பிழைத்துக் கொள்வாய், மரம் நடு... கடனில்லாமல் வாழ்வாய், மரம் நடு... மானம் காத்துக் கொள்வாய்’ எனத் தன் வாழ்நாள் முழுவதும் விவசாயிகளிடம் பிரசாரம் செய்து வந்தவர் ‘மரம்’ தங்கசாமி.

விவசாயச் சங்கத்தில் தீவிரமாக இயங்கி, விவசாயிகளின் நடைமுறை பிரச்னைகளைப் பேசியவர் தங்கசாமி. பல ஆண்டுகளுக்கு முன், வங்கியில் வாங்கிய கடனை இவரால் கட்டமுடியவில்லை. வங்கி இவருக்கு ‘ஜப்தி’ நோட்டீஸ் அனுப்ப... உறவினர்கள் பலரும் கைவிரித்துவிட்டனர். அந்நிலையில், இவரது தோட்டத்தில் வரப்போரத்திலும், வேலியோரத்திலும் இருந்த வேப்ப மரங்களும் பிற மரங்களும் தங்களின் உயிரைக் கொடுத்து இவரது மானத்தைக் காத்தன. அன்றிலிருந்து மரங்களின்மீது நன்றிகொண்டு, நன்றி மறவாத மர மனிதனாகவே வாழ்ந்தவர் இவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick