வீட்டுத்தோட்டத்தில் விளையும் திராட்சைப் பழம்!

வீட்டுத்தோட்டம்

 இயற்கை விவசாயத்தில் விளைந்த நஞ்சில்லாக் காய்கறிகளை உண்ண வேண்டும் என்றால், அதற்கு மூன்று வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று இயற்கை விவசாயம் செய்வது. இரண்டாவது, இயற்கை விவசாயப் பொருள்களை நம்பத்தகுந்த விவசாயிகளிடம் நேரடியாக வாங்குவது. மூன்றாவது, வீட்டு மாடியிலோ சுற்றுப்புறத்திலோ தோட்டம் அமைத்துக் காய்கறிகளை உற்பத்தி செய்வது. நகரங்களில் வசிக்கும் பெரும்பாலானோருக்கு இவற்றில் மூன்றாவது வழிதான் சாத்தியமாகிறது. அந்த வகையில், சென்னை, கிழக்குத் தாம்பரம், ராஜகீழ்ப்பாக்கத்தில் வசிக்கும் பிரேமா சுப்ரமணியன், வீட்டுத்தோட்டம் அமைத்து இயற்கை முறையில் காய்கறிகள் மற்றும் பழங்களை விளைவித்து கொள்கிறார்.

ஒரு காலைப்பொழுதில் பிரேமா சுப்ரமணியனைச் சந்தித்துப் பேசினோம். “எனக்கு 68 வயசாகுது. சின்ன வயசுல இருந்து எனக்குச் செடிகள்னா ரொம்பப் பிரியம். வீட்டைச்சுத்தி செடிகளா இருக்கணும்னு நினைப்பேன். மதுரையில குடியிருந்தப்போ வீட்டைச் சுத்தியும் செடிகளும், மர வகைகளும் இருந்துச்சு. 1999-ம் வருஷம் மதுரையில இருந்து சென்னைக்குக் குடி வந்தோம். அப்போ எங்க வீட்டைச் சுத்தி வயக்காடுதான் இருந்துச்சு. அதனால, செடிகளை வளர்க்குறதுல சிரமம் இல்லை. வீட்டைச் சுத்தி 5 தென்னை மரங்கள், மூணு கொய்யா, 5 பப்பாளி, எலுமிச்சைனு வெச்சேன். அடுத்து, மூலிகை செடிகள், காய்கறிகள்னு வளர்க்க ஆரம்பிச்சேன். என் கணவருக்கும் மகளுக்கும்கூடச் செடிகள் வளர்க்குறதுல ரொம்பவே ஆர்வம். அவங்கதான் நான் கேக்குற பொருள்களை வாங்கிட்டு வந்து கொடுப்பாங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick