கடுதாசி: ஏக்கம் ஏற்பட்டது!

வாசகர்கள்

புத்தம் புதிய மூன்று தொடர்களும் அருமை. இயற்கை விவசாயத்தில் விளைந்த விளைபொருள்களை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளோம். இந்தச் சமயத்தில் ஏற்றுமதி குறித்த தொடர் கட்டுரை வெளிவருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம்.

-எம்.சுதாராணி, நீலாம்பூர்.

துராந்தகத்தில் நடைபெற்ற ‘இனியெல்லாம் இயற்கையே’ பயிரலங்கு செய்தியைப் படித்தேன். தமிழக அரசின் பேரூராட்சி இயக்ககம் சார்பில் நடத்தப்பட்ட பயிலரங்கு, இவ்வளவு சிறப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அதுவும் பல மாதங்களாக நாங்கள் தேடிக்கொண்டுள்ள ‘வேஸ்ட் டீகம்போஸர்’ கரைசலையும் விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுக்கப் பட்டது எனப் படித்தபோது ஆச்சர்யப்பட்டேன். கடைசியில் இந்த நல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் போய்விட்டோமே என்ற ஏக்கம்தான் ஏற்பட்டது.

-கே.தேவநாதன், கடலூர்.

சேலம் மாவட்டத்தில், மேட்டூர் அணை இருந்தாலும் அதன் பலனை, எங்கள் மாவட்ட விவசாயிகளால், அனுபவிக்க முடியவில்லை. காவிரி நீரை, வறண்டு கிடக்கும் வசிஷ்ட நதி வழியாகக் கொண்டு வரலாம் என்று ஆய்வு செய்து கட்டுரை எழுதிய பொறிஞர் வீரப்பன் அவர்களை, சேலம் மாவட்ட மக்கள் மறக்கமாட்டார்கள். சேலம் மண்ணின் மைந்தர்தான், தமிழ்நாட்டின் முதல்வராக அமர்ந்துள்ளார். காவிரி நீரைச் சேலம் மாவட்ட மக்களுக்குக் கிடைக்கும்படி செய்தால், வரலாற்றில் அவர் பெயர் வாழும்.

-எம்.ஜெயராமன், ஏத்தாப்பூர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick