ஏன்... ஏன்? தெரிவோம்... தெளிவோம்! - 3 - வயல்வெளிப் பள்ளியில் பயில்வது எப்படி?

கேள்வி-பதில்

மிழக வேளாண்மைத் துறையின் உதவி வேளாண்மை இயக்குநரும் பூச்சியியல் வல்லுநருமான நீ.செல்வம், பல மாநிலங்களிலுள்ள வேளாண் அலுவலர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகளை அளித்து வருகிறார். ‘பசுமை விகடன்’ வாசகர்களுக்காக, ஐ.பி.எம் (Integrated Pest Management) தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை விவசாயிகளை எப்படிச் சென்றடைகிறது?

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை என்பது, ‘சீசன் ஆன் டிரெயினிங் புரோகிராம்’. அதாவது அந்தந்தப் பருவம் முழுவதும் நடக்கக்கூடிய ஒரு பயிற்சி. உலக உணவு மற்றும் வேளாண் கழகம், பலநாட்டு அரசுகளுடன் இணைந்து, அந்தந்த நாட்டில் உள்ள வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கும், அரசு சாரா நிறுவனங்களைச் சேர்ந்த பயிற்சியாளர்களுக்கும் விதைப்பு முதல் அறுவடை மற்றும் அறுவடைபின்சார் தொழில்நுட்பங்கள் வரையிலான தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொடுக்கிறது. இந்தப் பயிற்சிக்கு அதிகபட்சம் 40 நபர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இப்படிப் பயிற்சி எடுத்துக் கொள்பவர்களுக்கு, ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கித்தரப்படும். அதில் ஒரு ஏக்கர் நிலத்தில் அந்தப் பகுதியில் வழக்கமாகச் செயல்படுத்தும் வேளாண் யுக்திகளைக் கொண்டு விவசாயம் செய்ய வேண்டும். இன்னொரு ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையிலான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திச் சாகுபடி செய்ய வேண்டும். இந்த இரண்டு நிலங்கள் முதலும், கடைசியுமாக இருக்கும். இவற்றுக்கு இடையில் உள்ள மூன்று ஏக்கர் நிலம், பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும். இதுதான் இரண்டு நிலங்களையும் பிரித்து வைக்கும். இடையிலுள்ள இந்த மூன்று ஏக்கர் நிலத்தைப் பயிற்சியாளர்கள் சோதனைக்களமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்