உலகம் சுற்றும் உழவு! | Agricultural news around the world - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/10/2018)

உலகம் சுற்றும் உழவு!

உலக உழவு

 புயலால் பாதிக்கப்பட்ட ஆடுகள்

நியூசிலாந்து நாட்டு விவசாயிகளுக்கு ஆடு வளர்ப்புதான் பிரதானம். ஓர் ஆண்டுக்கு சுமார் 2 கோடி ஆட்டுக்குட்டிகள் அந்நாட்டில் பிறக்கின்றன. சமீபத்தில், இந்நாட்டின் வடக்குத் தீவுப் பகுதிகளில் வீசிய கடுமையான புயல்காற்றுக் காரணமாகப் பெய்த கனமழையால் லட்சக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கிறார்கள். சில நாள்கள் பெய்த மழையால் புதிதாகப் பிறந்த லட்சக்கணக்கான ஆட்டுக்குட்டிகள் இறந்துவிட்டன. வளர்ந்த ஆடுகளும் கொத்துக்கொத்தாக இறந்து வருவதால் கடும் மன உளைச்சலில் இருக்கிறார்கள், இந்நாட்டு விவசாயிகள்.

[X] Close

.

[X] Close