அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 3

2,000 ரூபாயில் ஏற்றுமதி ஆவணங்கள்... வழிகாட்டும் அமைப்புகள்...ஏற்றுமதி

விவசாயிகள் தங்களது விளைபொருள்களை அருகிலுள்ள சந்தை அல்லது கமிஷன் கடைகள் ஆகியவற்றில்தான் விற்பனை செய்கிறார்கள். பொருளின் தேவையைப் பொறுத்து வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் நிர்ணயிக்கும் விலை அல்லது தர வாரியாகப் பிரித்து ஏல முறையில் கிடைக்கும் விலைதான் விவசாயிகளுக்குக் கிடைக்கும். பல நேரங்களில் உற்பத்திச் செலவுக்குக்கூடக் கட்டுபடியாகாத விலைதான் விவசாயிகளுக்குக் கிடைக்கிறது. இந்தக் காய்க்கு இந்தத் தேதியில் இன்ன விலைதான் கிடைக்கும் என விவசாயியால் அறிந்துகொள்ளவே முடியாது. அதனால், வருமானம் குறித்தோ, செலவு குறித்தோ விவசாயிகளால் முன்கூட்டியே திட்டமிட முடியாத சூழ்நிலைதான் நிலவுகிறது. ஆனால், விளைபொருள்களை ஏற்றுமதி செய்ய முடிவெடுத்தால்... முன்கூட்டியே பொருளின் விலையைத் தெரிந்துகொள்ள முடியும். நாமே விலையை நிர்ணயம் செய்யவும் முடியும். அதனால், வருமானம் குறித்து விற்பனைக்கு முன்பே திட்டமிட முடியும்.

“கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. எங்களைப்போலச் சாமானியர்களால் உடனடியாக ஏற்றுமதியில் இறங்க முடியுமா... அதற்கு என்னென்ன தேவைப்படும்... யார் வழிகாட்டுவார்கள்... எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்” என்ற கேள்விகள் உங்களுக்குள் எழலாம். அவை குறித்துத்தான் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்