மண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்சமூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியா! | Manpuzhu mannaru - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/10/2018)

மண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்சமூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியா!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

மாத்தியோசி

சில மாசங்களுக்கு முன்ன, சேலத்துல இருந்து சென்னைக்குப் பேருந்து மூலமா பயணம் செய்தேன். வழக்கமா, ரயில் மூலமாத்தான் போவேன். எட்டு வழிச்சாலை பிரச்னை வந்த பிறகு, சாலை வழியா போய்ப் பார்க்கணும்னு எண்ணம் உருவானது. சும்மா சொல்லக் கூடாதுங்க, சேலம்-சென்னை நெடுஞ்சாலை அற்புதமா இருக்கு. கண்ணை மூடிட்டு, திடீர்னு திறந்துப் பார்த்தா ஏதோ, வெளிநாட்டு சாலையில பயணம் செய்யுற மாதிரி இருந்துச்சி. இந்த நெடுஞ்சாலை வழியா கார்ல பயணம் செய்யுறவங்க ஆசிர்வதிக்கப் பட்டவங்கனுதான் சொல்லணும்.

ஏன்னா, நினைச்ச இடத்துல, நல்ல உணவகத்துல வண்டியை நிறுத்தி, ஆற அமரச் சாப்பிடலாம். ஆனா, பேருந்து மூலமா பயணம் செய்யும்போது, சென்னை வந்து சேரும் வரையிலும் நல்ல சோறு சாப்பிட முடியாது. மோட்டல்ன்னு சொல்ற நெடுஞ்சாலை உணவகத்துல சாப்பிடறதுக்காக வண்டியை நிறுத்தினா, இறங்கி பார்க்கிறதுக்குக்கூட அச்சமாக இருக்கும். இதனால, பேருந்துல ஏறும்போதே, பழம், பொரிகடலைனு நொறுக்குத் தீனியை உஷாரா வாங்கிட்டுத்தான் ஏறுவேன். இந்த முறையும் அப்படித்தான் புறப்பட்டேன். வழக்கம்போல விழுப்புரத்தைத் தாண்டின உடனே, ‘பேரணி’ங்கிற ஊர்ல இருந்த உணவகத்துல வண்டியை நிறுத்தினாங்க.

[X] Close

.

[X] Close