அதிகரிக்கும் சிறுதானியச் சாகுபடி!

திட்டம்

றண்ட மற்றும் மானாவாரிப் பகுதியில் சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, வரகு, பனிவரகு, குதிரைவாலி ஆகிய சிறுதானியப் பயிர்கள்தான் முன்னிலை வகிக்கின்றன. குறிப்பாக ஏழை மக்களின் பொருளாதார வளர்ச்சியில் சிறுதானியங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. இந்நிலையில், ‘பசுமை விகடன்’ சிறுதானியங்கள் சிறப்பிதழுக்காக... தமிழக வேளாண்மைத் துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தியைச் சந்தித்துச் சிறுதானியங்களுக்காகத் தமிழக அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்துப் பேசினோம்.

“இந்த ஆண்டுத் தமிழகத்தில் மழை ஓரளவு கைகொடுத்துள்ளது. அதனால், விவசாயிகள் நெல் சாகுபடிப் பக்கம் திரும்பியிருக்கிறார்கள். ஆனால், நெல்லைவிட அதிகம் கைகொடுப்பது, சிறுதானியப் பயிர்கள்தான். அதனால்தான் தமிழகத்தில் சிறுதானியங்களை அதிக அளவில் சாகுபடி செய்ய ஊக்குவித்து வருகிறோம். பெரம்பலூர், சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி, திருப்பூர், விருதுநகர், கடலூர், விழுப்புரம், ஈரோடு ஆகிய 9 மாவட்டங்களைத் தேர்வு செய்து, அம்மாவட்டங்களில் சிறுதானியச் சாகுபடி குறித்து மாதிரி பண்ணைகள், விளக்கத்திடல்கள் என அமைத்துள்ளோம். தேசிய உணவுப்பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் சிறுதானியங்களை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!