விவசாயிகளைச் சிறப்பித்த விஷால்! | Actor Vishal honors and donates money to farmers - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/10/2018)

விவசாயிகளைச் சிறப்பித்த விஷால்!

நாட்டுநடப்பு

கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம், ‘சண்டக்கோழி’. இயக்குநர் லிங்குசாமி - நடிகர் விஷால்- இசையமைப்பாளர் யுவன் ஆகியோர் கூட்டணியில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், விஷாலின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் ‘சண்டக்கோழி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம், அதே கூட்டணியின் மூலம் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படம், அக்டோபர் 18-ம் தேதியன்று திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. 

விஷாலின் 25-வது திரைப்படம் என்பதால், அதற்கான இசை வெளியீட்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினார். அதில் தனது ‘சோஷியல் ஆர்கிடெக்ட்’ அமைப்பின் மூலம் குழந்தைகளின் படிப்புக்கான நிதியுதவியையும், நலிந்த விவசாயிகளுக்கு நிதியுதவியையும் வழங்கினார். கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்துவரும் விஷால், இவ்விழாவில் 30 விவசாயிகளை மேடையிலேற்றிக் கௌரவித்தார்.

[X] Close

.

[X] Close