ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி? - அதிர்ச்சியில் டெல்டா மாவட்ட மக்கள்! | More hydro carbon projects in Tamilnadu and delta farmers in shock - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/10/2018)

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி? - அதிர்ச்சியில் டெல்டா மாவட்ட மக்கள்!

பிரச்னை

டந்த அக்டோபர் 1-ம் தேதி... இந்தியாவில் தமிழ்நாடு உட்படப் பல்வேறு மாநிலங்களில் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் டில்லியில் கையெழுத்தாகியுள்ளது. மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் போடப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தத்தின்படி தமிழ்நாட்டில் ஒ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா நிறுவனங்கள் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்போவது உறுதியாகியுள்ளது. இதனால், காவிரி டெல்டா பகுதி மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இவ்விவகாரம் குறித்து நம்மிடம் சில விஷயங்களைச் சொன்னார், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன்.

“தமிழ்நாட்டில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க, ஒ.என்.ஜி.சி, வேதாந்தா ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மூன்று இடங்கள் என்றால், வெறும் மூன்று கிணறுகள் அல்ல. ஒ.என்.ஜி.சி-க்கு மரக்காணம் தொடங்கி, வேளாங்கண்ணி அருகே உள்ள புஷ்பவனம் வரை உள்ள நிலப்பகுதியில் 731 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு பல்லாயிரம் அடி ஆழத்தில் அதிக எண்ணிக்கையில் ராட்சதக் கிணறுகள் அமைத்து, ஹைட்ரோ கார்பன் எடுக்கப்போகிறார்கள் நிறுவனத்தார். வேதாந்தா நிறுவனத்துக்குத் தமிழ்நாட்டில் உள்ள கடல் பகுதியில் 2,574 சதுர கிலோமீட்டர் மற்றும் நிலப்பகுதியில் 1,794 சதுர கிலோ மீட்டர் என இரண்டு வட்டாரங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

[X] Close

.

[X] Close