தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்


இலவசப் பயிற்சிகள்

வெள்ளாடு வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் அக்டோபர் 16-ம் தேதி, ‘பஞ்சகவ்யா மற்றும் இயற்கை இடுபொருள்கள் தயாரித்தல்’, 23-ம் தேதி ‘லாபகரமான முறையில் வெள்ளாடு வளர்ப்பு’, 25-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்’, 30-ம் தேதி ‘லாபகரமான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு முக்கியம்.

தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 94885 75716.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!