முருங்கைக்கு மரியாதை!

கடுதாசிவாசகர்கள்

ட்டைப்படம் சிறப்பாக இருந்தது. முருங்கைக் கீரைக்கு இவ்வளவு மரியாதை உள்ளது என்று அறிந்தபோது ஆச்சர்யப்பட்டேன். வெளிநாட்டுக்காரர்கள், நம்ம ஊர் கீரையை நல்ல விலைக் கொடுத்து வாங்குவது நல்ல விஷயம்தான். ஆனால், இந்த நல்ல கீரையை நம் மக்களும் உண்டு, பயன்பெற வேண்டும்.

- எம்.உமா, திருநின்றவூர்.

யலில் பூச்சிகளைப் பார்த்தவுடனே, பூச்சிக்கொல்லி விஷம் வாங்க ஓடும் விவசாயிகள், ஒங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். இதனால், விஷமில்லாத உணவு கிடைப்பதோடு விவசாயிகளுக்குப் பணமும் மிச்சமாகும்.

- கே.பாஸ்கர், கொட்டாம்பட்டி.

ஜீரோபட்ஜெட் விவசாயத்தைத் தமிழ்நாட்டில் பசுமை விகடன் இதழ்தான் அறிமுகப்படுத்தியது. இதை நம் விவசாயிகள் கெட்டியாகப் பிடித்துக்கொண்டனர். அதேபோல ஆந்திரா விவசாயிகளும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளனர். அம்மாநில அரசும் அரவணைத்துக் கொண்டுள்ளது. ஆசிரியர் சொல்லியிருப்பதுபோல, இனியாவது தமிழக அரசு விழித்துக்கொள்ள வேண்டும்.

- எஸ்.கணேசன், திண்டல்.

‘மரம்’தங்கசாமி ஐயாவைச் சில கூட்டங்களில் பார்த்துள்ளேன். வாயைத் திறந்தால், மரங்களைப் பற்றித்தான் பேசுவார். மரங்களை நேசித்த, அந்த மரக் காதலனின் மறைவு செய்தியைக் கேட்டவுடன், எனது தோட்டத்தில் மரக்கன்று ஒன்றை நடவு செய்தேன்.

- ஆர்.வேதாச்சலம், உத்தரமேரூர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!