கொல்லிமலையில் சிறுதானியங்கள்... பாரம்பர்யம் மாறாத பயிர்ச் சாகுபடி! | Millet yield in Kollimalai - traditional crop cultivation - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/10/2018)

கொல்லிமலையில் சிறுதானியங்கள்... பாரம்பர்யம் மாறாத பயிர்ச் சாகுபடி!

கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆட்சி செய்த வளமான கொல்லிமலை பூமியில் இதுவரை பசுமைப்புரட்சி பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது ஆச்சர்யமான உண்மை.

ஆம்... இன்றுவரை அந்தப் பூமியில் ‘ஆதித்தமிழர் வேளாண்மை’தான் நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தக் கொல்லிமலைப் பகுதிதான், பழைமைப்புரட்சி விவசாயம் நடக்கும் அந்த மாசில்லா பூமி. கேழ்வரகு, சாமை, தினை, குதிரைவாலி, வரகு உள்ளிட்ட சிறுதானியப்பயிர்களை மானாவாரி முறையில் காலங்காலமாகச் சாகுபடி செய்து வருகிறார்கள் கொல்லிமலையில் உள்ள மலைக் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள்.

நாமக்கல் நகரிலிருந்து 56 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, கொல்லிமலை. கடல் மட்டத்திலிருந்து 1,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கொல்லி மலைக்குச் செல்ல மலைப்பாதையில் 26 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். இப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் இருப்பதால், மலைப்பாதைப் பயணம் மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது.

சோளக்காடு எனும் கிராமத்தில் செயல்படுகிறது, பழங்குடி மக்கள் சந்தை. முழுக்க முழுக்கக் கொல்லைமலையில் விளையக்கூடிய விளைபொருள்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. கொல்லிமலையில் உள்ள 14 நாடுகளில் 250 கிராமங்கள் உள்ளன. அவற்றில் சேலூர் நாடு எனும் நாட்டுக்குட்பட்ட கிராமம், குழிப்பட்டி.

[X] Close

.

[X] Close