ஒரு ஏக்கர்... 120 நாள்கள்... ரூ.37,000 - நல்ல விளைச்சல் தரும் நாட்டுக் கம்பு! | Profitable pearl millet yielding - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/10/2018)

ஒரு ஏக்கர்... 120 நாள்கள்... ரூ.37,000 - நல்ல விளைச்சல் தரும் நாட்டுக் கம்பு!

மகசூல்

தென் மாவட்டங்களில் மானாவாரி நிலங்களில் இன்றளவும் சிறுதானியங்கள்தான் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. பசுமைப்புரட்சி வந்த பிறகு, அனைத்துப் பயிர்களுக்குமான பாரம்பர்ய ரகங்கள் ஒழிக்கப்பட்டு வீரிய ரகங்கள் புகுத்தப்பட்டன. அவற்றில் சிறுதானியங்களும் தப்பிக்கவில்லை. ஆராய்ச்சி மையங்கள் மூலம், சிறுதானிய வகைகளில் வீரிய ஒட்டு ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், அவற்றைத்தான் தற்போது பெரும்பாலான விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். இந்தச் சூழ்நிலையிலும் பாரம்பர்ய நாட்டு ரகங்களை மட்டுமே சாகுபடி செய்யும் விவசாயிகளும் உண்டு. அவர்களில் ஒருவர்தான், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபால்சாமி. இவர் தன் மனைவி ராஜேஸ்வரியோடு இணைந்து ‘காட்டுக்கம்பு’ என்று சொல்லப்படும் நாட்டுரகக் கம்பை மானாவாரியாகச் சாகுபடி செய்து வருகிறார்.

சாத்தூரிலிருந்து ஏழாயிரம்பண்ணை செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஓ.மேட்டுப்பட்டி எனும் கிராமம். இங்குதான் உள்ளது, கோபால்சாமியின் மானாவாரி நிலம். நிலத்தின் அருகிலேயே வீட்டுடன் கூடிய தொழுவமும் உள்ளது. நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார், கோபால்சாமி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

.

[X] Close