மரத்தடி மாநாடு: கூட்டுப் பண்ணைத்திட்டம் வெற்றி... கூடுதல் நிதி ஒதுக்கிய அரசு! | Marathadi manadu - Pasumai Vikatan | பசுமை விகடன்

மரத்தடி மாநாடு: கூட்டுப் பண்ணைத்திட்டம் வெற்றி... கூடுதல் நிதி ஒதுக்கிய அரசு!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: வேலு

 கொட்டகையில் நாற்றங்காலுக்குப் பயன்படுத்துவதற்காகத் தயாரித்து வைத்திருந்த ஜீவாமிர்தக் கரைசலைக் கலக்கிக் கொண்டிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அந்தநேரத்தில் சடசடவென தூறல் விழவும் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் ‘காய்கறி’ கண்ணம்மாவும் ஏரோட்டி இருக்கும் கொட்டகைக்குள் ஒதுங்கினர். 

“என்ன திடீர்னு காலையிலே மழை பிடிச்சிடுச்சு” என்று கேட்டார் காய்கறி.  “வேறென்ன... பருவமழைதான்” என்றார் ஏரோட்டி. இவர்கள் உரையாடுவதைக் கவனித்துக்கொண்டிருந்த வாத்தியார், ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார்.

“போன 2017-ம் வருஷம், சிறு குறு விவசாயிகளைக் குழுவா இணைச்சு விவசாயம் செய்ற மாதிரி கூட்டுப் பண்ணைத் திட்டத்தை வேளாண்மைத்துறை மூலமாகச் செயல்படுத்துனாங்க. சிறு விவசாயிகள் தனித்தனியா விவசாயம் செய்யாம, இதுமாதிரி கூட்டாகச் சேர்ந்து செய்றப்போ தண்ணீர் பிரச்னை, வேலையாள் பிரச்னைனு எல்லாத்தையும் சமாளிக்க முடியும். போன வருஷம் இந்த மாதிரி ஒரு குழுவுக்கு 20 பேர்னு 10,000 உழவர் ஆர்வலர் குழுக்களை அமைச்சாங்க. ஐந்து உழவர் ஆர்வலர் குழுக்களை இணைச்சு 2,000 உழவர் உற்பத்தியாளர் குழுக்களை அமைச்சாங்க. ஒவ்வொரு குழுவுக்கும் மூலதன நிதியா 5 லட்சம் ரூபாய் கொடுத்து இயந்திரங்கள்லாம் வாங்கிப் பயன் படுத்துனாங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick