மண்புழு மன்னாரு: குறைந்த விலையில் மரக்கன்றுகள் வாங்க... ‘கடியம்’ போங்க! | Manpuzhu mannaru - Pasumai Vikatan | பசுமை விகடன்

மண்புழு மன்னாரு: குறைந்த விலையில் மரக்கன்றுகள் வாங்க... ‘கடியம்’ போங்க!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மாத்தியோசி

ந்திர மாநிலம், ராஜமுந்திரிக்குப் பலமுறை போயிருக்கேன். ஒவ்வொரு முறையும், அந்த ஊர் நண்பர்கள், ‘கடியம்’ (Kadiyam) போயிட்டு வருவோம், வாங்கன்னு கூப்பிடுவாங்க...’’ ஆனா, கடியம் போறது, கடினமான காரியமாவே இருந்து வந்துச்சு. போன வருஷம், கடியத்துக்குப் போக வாய்ப்பு கிடைச்சது. செங்கல்பட்டுல இருந்து, காக்கிநாடப் போற ரயில்ல ஏறி, ராஜமுந்திரிக்குப் பயணமானேன். சாயங்காலம் ஏழு மணி வாக்குல, வண்டி ஆந்திரா எல்லைக்குள்ளப் போனது. அடுத்து, ஒவ்வொரு ஸ்டேஷன்லேயும், மோர் விற்பனை ஜோரா நடந்துச்சு. சாப்பிட்டு முடிச்சவுடனே, மோரை வயிறு முட்ட குடிச்சாங்க.

என்னோட பயணம் செய்த ஆந்திராகாரர்கிட்ட, மோர் ரகசியத்தைக் கேட்டேன். ‘‘பாபு (தம்பி), ஆந்திர மக்கள் கார, சாரமா சாப்பிடுவாங்க. அப்படிச் சாப்பிட்டாலும், உடம்புக்குத் தொந்தரவு வராம இருக்கிறதுக்குக் காரணம், இந்த மோர்தான். தயிரைக்காட்டிலும் மோர்தான் நல்லது. ராத்திரி சாப்பிட்டை முடிச்சிட்டு, வயிறு நிறைய மோர் குடிச்சா, தூக்கம் சும்மா கும்முனு வரும். உடம்பும் ஆரோக்கியமா இருக்கும். அதனாலத்தான், ஆந்திர மக்கள் மோரை விரும்பிக் குடிக்கிறாங்க. நீங்களும்கூட, கொஞ்சம் குடிங்க பாபு’’னு சொல்லிட்டு, எனக்கும் இஞ்சி, கொத்தமல்லி தழைப்போட்ட மோர் பாட்டிலைக் குடிக்கக் கொடுத்தாரு.

சுவையான மோரைக் குடிச்சிட்டுத் தூங்கினேன், அதிகாலையிலத்தான் தூக்கம் கலைஞ்சது. ஜன்னல்ல எட்டிப்பார்த்தா, ரெண்டு பக்கமும், மீன் குளங்களா இருந்துச்சு. முன்னாடியெல்லாம், இவ்வளவு மீன் குளங்கள் கிடையாதேனு, அந்த ஆந்திரா நண்பர்கிட்ட பேச்சு கொடுத்தேன். ‘‘பாபு, சரியா கண்டுபுடிச்சிட்டீங்க. இந்தப் பகுதியில நெல்லுதான் விளைஞ்சது. ஆனா, அதுல போதுமான லாபம் கிடைக்கில. அதனால, இந்தப் பகுதியில உள்ள விவசாயிங்க, மீன் வளர்க்க ஆரம்பிச்சிட்டாங்க. இதுல வேலையும் குறைவு. வருமானமும் வளந்துகிட்டே இருக்குது’’னு சொன்னாரு. ‘‘விவசாயத்தைக்காட்டிலும், மீன் வளர்ப்பை முறையாகச் செய்தால், நல்ல லாபம் கட்டாயம் கிடைக்கும்’’னு மீன்வளத்துறை விஞ்ஞானிங்க சொன்ன விஷயம் பளீச்சுனு நினைவுக்கு வந்துச்சு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick