தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 14 - அத்திக்கடவு - அவிநாசித் திட்டம்: தேவை ரூ. 1,490 கோடியா? ரூ. 950 கோடியா..?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தண்ணீர்

மிழ்நாட்டில் 19 மற்றும் 20-ம் நூற்றாண்டுகளில் பயனுள்ள பல பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. மேட்டூர் அணை, பரம்பிக்குளம்-ஆழியாறுத் திட்டம், வைகை அணை, சாத்தனூர் அணை, பவானிசாகர் அணை, மணிமுத்தாறு அணை, கிருஷ்ணகிரி அணை, பேச்சிப்பாறை–பெருஞ்சாணி அணை, அமராவதி அணை, கொடகனாறு அணை, திருமூர்த்தி அணை எனப்பல அணைகள் கட்டப்பட்டு... பாசனத்துக்காகவும் குடிநீருக்காகவும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன. பல லட்சம் மக்களுக்குக் குடிநீர் வழங்கல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அணைகளைக் கட்டியதில்... ‘பெருந்தலைவர்’ காமராஜர், சி.சுப்பிரமணியம், கக்கன், வெங்கட்ராமன் போன்ற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கர்னல் ஜான் பென்னிகுக், ஆர்தர் காட்டன், எல்லிஸ், ஏ.வி.ராமலிங்க அய்யர், ஏ.ஆர்.வேங்கடாச்சாரி, எம்.எஸ்.திருமலை அய்யங்கார், யூ.ஆனந்த ராவ், கே.வி.ஏகாம்பரம், எஸ்.பி.நமசிவாயம், டி.எஸ்.கண்ணன், எஸ்.பஞ்சநாதன், கெ.ராமலிங்கம், ஆ.மோகனகிருஷ்ணன் போன்ற பொறியாளர்களின் பங்களிப்பு மகத்தானது. இவர்களின் திறமை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றின் காரணமாகத்தான் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick