மண், மக்கள், மகசூல்! - 14 - மகசூலைக் கூட்டும் செறிவூட்டப்பட்ட மண்புழு நீர்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர்மண் நலம்

ருவையும் அதிலிருந்து மண்புழு உரத்தையும் எளிதாகத் தயாரிப்பதைப் பற்றி ஏற்கெனவே பார்த்தோம். மண் நலனைக் கூட்டும் செறிவூட்டப்பட்ட மண்புழு நீர் (வெர்மிவாஷ்) தயாரிப்பது குறித்துப் பார்ப்போம். அதற்கு முன், செறிவூட்டப்பட்ட மண்புழு நீரைத் தயாரிக்கும் முயற்சியில் நான் இறங்கிய கதையைச் சொல்லி விடுகிறேன்.

மண்புழு தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடத் தொடங்கிய பிறகு, 1990-களின் ஆரம்பத்தில், மண்புழு உரம் (Vermicompost) தயாரிக்கும் முறைக்குக் காப்புரிமை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தேன். 1993-ம் ஆண்டில் காப்புரிமை கிடைத்தது (A prefabricated vermicompost plant. Patent no. 181279 Dated 08.03.1993). அப்போது, என் ஆசிரியரான அனந்தகிருஷ்ணன், ‘இந்தக் காப்புரிமையை மக்களுக்குக் கொடுக்கப் போகிறாயா அல்லது வணிக ரீதியாகப் பயன்படுத்த போகிறாயா’ என்று என்னிடம் கேட்டார். நான், ‘மக்கள் பக்கம்தான்’ என்றேன். உடனே அவர், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் வேளாண்மைப் பகுதிக்கு அந்தச்சமயத்தில் பொறுப்பாளராக இருந்த வெங்கடரமணியைத் தொலைபேசியில் அழைத்து விவரத்தைச் சொன்னார். தொடர்ந்து, தி இந்து நாளிதழில் மண்புழு உரம் தயாரிக்கும் முறை பற்றி விரிவாக எழுதி வெளியிடப்பட்டது. அச்செய்தி, நாடு முழுக்கக் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து, மண்புழு உரம் தயாரிக்கும் முறையைத் தமிழ்மொழியில் ‘பண்ணைச் செய்தி மலர்’ இதழில் வெளியிட்டார், தியாகராஜன். தொடர்ந்து நாட்டின் பெரும்பாலான மொழிகளில் மண்புழு உரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் குறித்துச் செய்திகள் வெளிவந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick