இந்தப் பால் விற்பனைக்கல்ல... ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் உன்னத கோசாலை! | Dairy farming with only Country Cows by retired government employee - Pasumai Vikatan | பசுமை விகடன்

இந்தப் பால் விற்பனைக்கல்ல... ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் உன்னத கோசாலை!

கால்நடை

விவசாயிகளின் கையிலிருந்து பெரு வணிகர்களின் கைகளுக்குச் சென்றிருக்கும் தொழில்களில் ஒன்று பால் பண்ணை. அனைவரின் வீட்டிலும் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருள் பால் என்பதால், பால் பதப்படுத்தி விற்பனை செய்யும் தொழில், பெரும் பொருளீட்டும் தொழிலாக மாறியுள்ளது. இத்தகைய சூழ்நிலையிலும் லிட்டர் கணக்கிலான பாலை இலவசமாக வழங்கி வருகிறார், சேலம் மாவட்டத்தில் கோசாலை நடத்தி வரும் பாஸ்கரன்.

சேலம்-ஆட்டையாம்பட்டி சாலையில் ராஜாப்பாளையம் பெத்தாம்பட்டி கிராமத்தில்தான் ‘காமதேனு கோசாலை’ என்ற பெயரில் கோசாலை நடத்தி வருகிறார், பாஸ்கரன். கோசாலையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்த பாஸ்கரனைச் சந்தித்து நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பேச ஆரம்பித்தார், பாஸ்கரன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick