வாரம் ரூ.4,000 வருமானம்! - நிம்மதி கொடுக்கும் மலைப்பயிர்கள் சாகுபடி!

வனம்

பொதுவாக, மலைப்பாதைகளில் பயணம் மேற்கொண்டால் மனது லேசாகிவிடும். மெல்லிய தூறலுடன் கூடிய மாலைவேளை பயண அனுபவம் குறித்துச் சொல்லவே வேண்டியதில்லை. அப்படி ஒரு மலைப்பாதைப் பயணம் சமீபத்தில் அமைந்தது. திண்டுக்கல் மாவட்டம், பாச்சலூர் மலைப்பகுதியில் இயற்கை விவசாயம் மேற்கொண்டு வரும் தில்லை நாதனைச் சந்திக்கச் சென்றபோதுதான் அந்த அனுபவம் கிட்டியது.

ஒட்டன்சத்திரத்திலிருந்து வளைந்து நெளிந்து செல்லும் பாச்சலூர் சாலையில் பயணிக்கும்போது, வழி நெடுக உள்ள மலைத்தோட்டங்களில் முட்டைக்கோஸ், காலிஃபிளவர், எலுமிச்சை எனச் செழிப்பாகக் காட்சியளித்தன. ஒட்டன்சத்திரத்தில் இருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, கடைசிக்காடு. அங்கிருந்து வலது பக்கமாகத் திரும்புகிறது, செம்பரான்குளம் செல்லும் மண்பாதை. அந்தப் பாதையில் ஒரு மைல் தூரத்தில் சாலையோரத்திலேயே நம்மை வரவேற்கிறது, ‘வெண்பா நாச்சியார் இயற்கை வேளாண்மைப் பண்ணை’.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick