இலவச மின்சாரம்... கடன் தள்ளுபடி... விவசாயிகளுக்குக் கருணை காட்டிய கருணாநிதி! | Karunanidhi to agriculture and farmers - memories - Pasumai Vikatan | பசுமை விகடன்

இலவச மின்சாரம்... கடன் தள்ளுபடி... விவசாயிகளுக்குக் கருணை காட்டிய கருணாநிதி!

நினைவுகள்

மிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கலைஞர் கருணாநிதி, முதுமை மற்றும் உடல்நலக்குறைவால்... கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். நீண்ட நெடிய அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் கருணாநிதியின் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும்... தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ள பெரும்பான்மையான முன்னோடித் திட்டங்களுக்குக் காரணகர்த்தா அவர்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக, அவர் ஆட்சியிலிருந்த சமயங்களில், விவசாயிகளுக்கு நன்மை செய்யக்கூடிய பல திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறார். அப்படி அவர் மேற்கொண்ட சில திட்டங்கள் குறித்து விவசாயிகள் சிலர் நினைவு கூர்ந்து சொன்ன விஷயங்கள் இங்கே...

‘புலியூர்’ நாகராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணித் தலைவர்: “விவசாயப் பயன்பாட்டுக்கு இலவச மின்சார இணைப்பு கேட்டு விவசாயிகள் நீண்டகாலமாகப் போராடி வந்த நிலையில்... 1989-ம் ஆண்டுத் தமிழக முதல்வராகக் கருணாநிதி பொறுப்பேற்றவுடன் இலவச மின்சாரம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதனால், மிகப்பெரும் நிதிச்சுமையில் இருந்து விவசாயிகளுக்கு விடுதலை கிடைத்தது. தொடர்ந்து 2006-ம் ஆண்டு அவர் முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அவரது ஆட்சியில்தான் மிக அதிகளவிலான கடன்தொகை தள்ளுபடி செய்யப்பட்டது. அது இந்திய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அந்தச் சமயங்களில் நிலவி வந்த கடும் வறட்சி காரணமாக டெல்டா பகுதி விவசாயிகள் நெருக்கடியான நிலையில் இருந்தனர். அந்தச் சமயத்தில் அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடி டெல்டா பகுதி விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick