படையெடுக்கும் படைப்புழு... தீர்வு சொல்லும் விஞ்ஞானிகள்!

பயிர் மேலாண்மை

ற்கெனவே இருக்கும் பூச்சிகளின் தொல்லை தாங்க முடியாத நிலையில், தற்போது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஒரு சின்னஞ்சிறிய புழு, உலகையே உலுக்கிக்கொண்டிருக்கிறது. இந்தப் புழு, மக்காச்சோளப் பயிரை அதிகளவில் தாக்குகிறது. படைப்புழு எனப் பெயரிடப் பட்டுள்ள இந்தப் புழு, அமெரிக்காவில்தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது. வெகு குறுகிய காலத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரவியது. தற்போதைய நிலை நீடித்தால் ஆப்பிரிக்கக் கண்டத்தில் விரைவில் பஞ்சத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். இந்தப் புழுவை அழிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச விஞ்ஞானிகளை அழைத்து அடிக்கடி விவாதிக்கிறது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஆப்பிரிக்காவை ஆட்டிப் படைத்துவிட்டு, ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறது இந்தப் புழு. இதன் தாக்குதல் விரைவில் இந்தியாவிலும் இருக்கும் எனச் சில மாதங்களுக்கு முன்பு, உலக விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்திருந்தார்கள். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இந்தப் புழு கண்டுபிடிக்கப்பட்டிப்பது, இந்திய விஞ்ஞானிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick