3 ஏக்கர்... 130 நாள்கள்... ரூ.1,60,000 வருமானம்... விடுமுறை விவசாயியின் இயற்கைச் சாகுபடி!

மகசூல்

“சின்ன வயசுல இருந்தே எனக்கு விவசாயத்துல ஆர்வம். படிச்சுட்டு ஐ.டி கம்பெனியில வேலை பார்த்தாலும் மனசு முழுக்க விவசாய ஆசை இருந்துச்சு. அந்த ஆசைதான் லட்சியமா மாறி என்னை வெற்றிகரமான இயற்கை விவசாயியா மாத்தியிருக்கு” என்று சிலாகித்துச் சொல்கிறார், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார். விருத்தாசலத்தில் இருந்து ஜெயங்கொண்டம் செல்லும் வழியில் உள்ள டி.வி.புத்தூர் கிராமத்தில்தான் சுரேஷ்குமாரின் தோட்டம் இருக்கிறது. ஒரு விடுமுறை நாளில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சுரேஷ்குமாரைச் சந்தித்தோம்.

“பரம்பரை விவசாயக் குடும்பத்துல பிறந்தவன் நான். எங்களோட குடும்பத்துக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்துல அப்பா விவசாயம் பார்த்துக்கிட்டுருந்தார். அதுல கிடைச்ச வருமானத்தை வெச்சு 30 ஏக்கர் நிலம் வாங்கினோம். நான் சின்ன வயசுல இருந்தே அப்பாவுக்கு விவசாயத்துல உதவியா இருப்பேன். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிட்டு பெங்களூருல வேலை பார்த்துட்டுருக்கேன். அப்படியே விவசாயத்தையும் செஞ்சுட்டுருக்கேன். விடுமுறை கிடைச்சா உடனே கிளம்பித் தோட்டத்துக்கு வந்துடுவேன். அப்பா ரசாயன உரங்களைப் போட்டுதான் விவசாயம் செஞ்சார். நான், விவசாயம் செய்யலாம்னு ஆரம்பிச்சவே ‘இயற்கை விவசாயம்தான்’னு முடிவு பண்ணிட்டேன். அதுக்கு எனக்கு வழிகாட்டினது ‘பசுமை விகடன்’ புத்தகம்தான். இயற்கை விவசாயம் சார்ந்த நிறைய நிகழ்ச்சிகளுக்குப் போயிருக்கேன். அங்க கத்துக்கிட்ட விஷயங்களும் எனக்கு உதவியா இருக்கு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick