காடைக்கண்ணி... 60 நாளில் அறுவடை... ஒரு மழையே போதும்!

மகசூல்

ழந்தமிழரின் உணவுகளில் முக்கிய இடம்பிடித்தவை... வரகு, சாமை, தினை, குதிரைவாலி, காடைக்கண்ணி போன்ற சிறுதானியங்கள்தான். இவற்றை ‘அருந்தவசம்’ எனச் சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளனர். இவை குறிஞ்சி, முல்லை ஆகிய இரண்டு வகை நிலங்களிலும் விளையக்கூடியவை. சிறுதானியங்களை இறை வழிபாட்டிலும் பயன்படுத்தி வந்துள்ளனர், நம் முன்னோர். இப்படிப்பட்ட சிறுதானியங்களில் ஒன்றான காடைக்கண்ணியை, அழியாமல் பாதுகாத்து விதைப்பெருக்கம் செய்து வருகிறார், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி கருப்பசாமி. இவர் சிவகாசியில் இயங்கிவரும் ‘தேன்கனி இயற்கை விவசாயிகள் கூட்டமைப்’பின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick