மண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபி!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மாத்தியோசிஓவியம்: வேலு

ண்மையில, நபார்டு வங்கியோட நிறுவன நாள் விழா சென்னையில நடந்துச்சி. அமைச்சர், அரசு அதிகாரிகள்னு பெரிய பெரிய ஆள்கள் எல்லாம் வந்து, நல்லா பேசுனாங்க. தேநீர் இடைவேளை நேரத்துல, எல்லாரும் தேநீர் குடிக்க வரிசையில நின்னோம். தேநீர் கொடுக்கிற இடத்துக்குப் பக்கத்திலேயே, ரெண்டு இளைஞர்கள் நின்னுக்கிட்டு, ஏதோ ஒரு பானத்தை ஆர்வத்தோடு ஊத்திக் கொடுத்துக்கிட்டிருந்தாங்க. தேநீர் வரிசையைக் காட்டிலும், அங்க ஆள்களோட எண்ணிக்கை குறைவா இருந்துச்சி. கூட்டம் குறைவா இருந்தா, ஏதோ விஷயம் இருக்குன்னு புரிஞ்சது. உடனே, அந்தப் பானத்தைக் குடிக்கப் போய் நின்னேன்.

‘‘ஐயா, இது தென்னை மரத்துலிருந்து இறக்குன நீரா பானம். இயற்கையானது, சுவையானது, ஆரோக்கியமானதுனு சொல்லிக்கொண்டே டம்ளர் நிறைய, நீராவை ஊத்திக் கொடுத்தாங்க. முதல் முறையா நீராவைச் சுவைச்சுப் பார்த்தேன். அடடா... அற்புதம், அருமை... ரெண்டு டம்ளர் நிறைய வயிறுமுட்டக் குடிச்சிட்டு திரும்பிப் பார்த்தேன். அதே நாலு பேர்தான், நீராவை ருசிச்சி குடிச்சிக்கிட்டிருந்தாங்க. மத்தவங்க எல்லாம், பவ்யமா வரிசையில நின்னும், தேநீருக்காகத் தேமேனு காத்துக்கிட்டிருந்தாங்க. இவ்வளவு அருமையான இயற்கை பானத்தைக் குடிச்சி ருசிக்காம, இப்படி வரிசையில நிக்கிறாங்களேன்னு பரிதாபமாத்தான் வந்துச்சி. ஆனா, சில விவரம் தெரிஞ்ச அதிகாரிங்க, நீராவைக் குடிச்சிட்டு, அத பத்தின விவரங்களை ஆர்வமா கேட்டதையும் பார்க்க முடிஞ்சது. நிகழ்ச்சி முடிஞ்சி, மதிய உணவு இடைவேளை விட்டாங்க, நட்சத்திர ஓட்டல் சாப்பாடுன்னா சகலமும் இருக்கும். ஆனா, எனக்கு நீரா மேலயே நினைப்பா இருந்துச்சி. அந்தக் காரசாரமான சாப்பாடைக்காட்டிலும் நீராவைக் குடிப்போம்னு, திரும்பவும் நீரா குடிச்சேன். இன்னும்கூட நீராச் சுவை நாக்குல ஒட்டிக்கிட்டே இருக்கு. நீராவைப் பத்தி ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தாலும், அதோட சுவையும் மணமும் என்னைக் கட்டிப் போட்டுச்சி. நீராவை அன்போடு சுவைக்கக் கொடுத்த, காளிங்கராஜ், சரவணன்ங்கிற அந்த இரண்டு இளைஞர்கள்கிட்ட பேச்சுக் கொடுத்தேன்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்