மண், மக்கள், மகசூல்! - 15 - விவசாயிகளும் விஞ்ஞானிகள் ஆக வேண்டும்! | Significance of soils and soil science - Pasumai Vikatan | பசுமை விகடன்

மண், மக்கள், மகசூல்! - 15 - விவசாயிகளும் விஞ்ஞானிகள் ஆக வேண்டும்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர்மண் நலம்முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில்

‘மண்ணின் நலத்தை மீட்டெடுப்பதன் மூலமே, மனிதக்குலத்தை இனி பிழைத்திருக்கச் செய்ய முடியும்’ என்ற உண்மையை உரக்கச் சொல்லி, உழவர்களைச் செயல்படத் தூண்டும் அனுபவத் தொடர் இது!
கடந்த அரை நூற்றாண்டில், உலகம் முழுக்க இயற்கை வேளாண்மை பற்றிய சிந்தனைகளும் செயல்பாடுகளும் அதிகரித்து வருகின்றன. ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் இயற்கை வேளாண்மைக்கான முயற்சிகள் அதிகம். இங்கிலாந்து நாட்டின் இளவரசர் சார்லஸும் இயற்கை வேளாண்மையில் அதிக ஆர்வம் கொண்டவர். ரேச்சல் கார்சன் எழுதிய ‘சைலன்ட் ஸ்பிரிங்’ (Silent Spring) எனும் புத்தகத்துக்குப் பிறகு, அமெரிக்காவில், நஞ்சில்லாத வேளாண் இயக்கம் பரவத் தொடங்கியது. மலேசியாவில், ‘பினாங்கு பயனீட்டாளர் சங்கம்’ (Consumers Association of Penang- CAP), இயற்கை வேளாண்மையைப் பரப்புவதில் பெருமுயற்சி எடுத்து வருகிறது. இலங்கையில், அமரர் ரஞ்சித் டிசில்வா அவர்களின் இயற்கை வேளாண் முயற்சிகள் குறிப்பிடத்தகுந்தவை. பங்களாதேசம், நேபாளம், இந்தியா, பாகிஸ்தான் எனப் பல ஆசிய நாடுகளில், இயற்கை வேளாண்மை செயல்பாடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சீனாவிலும்கூட மண்புழு மற்றும் மண்நலன் குறித்த ஆராய்ச்சிகளைப் பேராசிரியர் சன் மட்ரம் மற்றும் முனைவர் யூபிங் ஃபா(Professor Sun  Dr.Yueping Fa ) ஆகியோர் முன்னெடுத்துச் செல்கின்றனர். இவர்களின் ஆராய்ச்சிக்கும் வழிகாட்டி வருகிறேன். அடுத்து ரஷ்யாவில், பேராசிரியர் இகோர் டிட்டோ (Igor Titto), மண்புழு உரத்தைப் பரவலாகக் கொண்டு சென்றுள்ளார்.

இயற்கை வேளாண்மை, ‘காலத்தின் தேவை’ என்பதைப் புரிந்துகொண்டு உலகம் முழுக்கப் பல அமைப்புகளும் இயக்கங்களும் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், இயற்கை வேளாண் இயக்கம் இரண்டு கால் பாய்ச்சலில் பயணித்தால்... வேதியுரம், பூச்சிக்கொல்லி மற்றும் விதை விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் நான்கு கால் பாய்ச்சலில் பயணிக்கின்றன. இதற்குச் சட்டத் திட்டங்கள் கம்பெனிகளுக்குத் துணை நிற்பதும், விவசாயிகளின் அறியாமையுமே காரணம்.  அண்மையில் ஆந்திர மாநிலத்தில், நஞ்சில்லா விவசாயத்தை  மாநிலம் முழுவதும் கொண்டு செல்ல, ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலம் 100% இயற்கை விவசாயப் பாதையில் நடைபோட்டு வருகிறது. பல பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் இயற்கை விவசாயத்தைப் பாடத்திட்டத்தில் சேர்க்கத் தொடங்கியுள்ளதைப் பார்க்கும்போது நம்பிக்கை உருவாகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick