தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 15 - சேலம் மாவட்டத்துக்கும் காவிரி நீரைக் கொடுக்க முடியும்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தண்ணீர்‘பொறிஞர்’ அ.வீரப்பன்

மிழக நீர்வளங்களின் முக்கியத்துவமும், அவற்றின் அழிவும், மீட்டுருவாக்கமும், அதைச் சார்ந்த அரசியல் பிரச்னைகளைப் பற்றியும் பேச இருக்கிறது, இத்தொடர்.

நீர்வளங்களைப் பாதுகாக்கவும் அதை மீட்டெடுக்கவும் தூண்டுகோலாக இந்தப் பகுதி அமையும்.


உலக அளவில் தண்ணீருக்காகப் பல பிரச்னைகளைச் சந்தித்த ஆறுகளில் காவிரியும் ஒன்று. கடந்த 126 ஆண்டுகளாக (1892 முதல்) காவிரி ஆறு பிரச்னையில் சிக்கித் தவித்து வருகிறது. 05-02-2007-ம் தேதி வழங்கப்பட்ட ‘காவிரி நடுவர்மன்ற’ இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு 192 டி.எம்.சி தண்ணீர் அளிக்கப்பட்டது. தொடர்ந்து பல வழக்குகளைச் சந்தித்து... 16-02-2018-ம் தேதி வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஒரு முடிவு எட்டப்பட்டிருக்கிறது. 1970களில், காவிரியில் தமிழகத்தின் பங்கு 460 டி.எம்.சி. இன்று 177.25 டி.எம்.சி தண்ணீர் என்ற அளவுக்குக் குறைந்து நிற்கிறது. இதுவும் நிலைக்குமா என்பதைக் காலம்தான் முடிவு செய்யும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick