அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 1

புதிய தொடர் - ஏற்றுமதி

ங்க காலம் தொடங்கி இந்த கம்ப்யூட்டர் காலம் வரை... தமிழ்நாட்டு மக்கள் விளைபொருள்களை ஏற்றுமதி செய்து வருகிறார்கள். நம் நாட்டில் இருக்கும் தொழில்களிலேயே மிகவும் பழைமையானது, விவசாயம்தான். விவசாயம் நம் ரத்தத்திலேயே ஊறிப்போன விஷயம். விவசாயம் சார்ந்த தொழில்களில்தான் இன்று நாட்டில் உள்ள மக்களில் அறுபது சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் நிலவும் தட்பவெப்ப நிலையும், விளைபொருள் உற்பத்தியும் அமைந்துள்ள அளவுக்கு, விளைபொருள்களுக்கான விற்பனை வாய்ப்பை விவசாயிகள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்பது இந்திய விவசாயத்தின் பெரும் குறைதான்.

விவசாயிகள் விற்பனைக்கு முக்கியத்துவம் கொடுத்து விற்பனை சரியாக அமைந்திருந்தால், பல இந்திய விவசாயிகள் கோடீஸ்வரர்களாகத்தான் இருந்திருப்பார்கள். இப்போதும் விற்பனையில் கெட்டிக்காரர்களாக இருக்கும் விவசாயிகள் பலர் விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றியுள்ளனர். இந்தத் தொடரின் மூலமாக விவசாய விளைபொருள்களின் ஏற்றுமதி குறித்த விஷயங்களைப் பார்க்க இருக்கிறோம். இதில் மாயாஜாலமும் இல்லை, மந்திரங்களும் இல்லை. ஏற்றுமதி மூலம் லாபம் ஈட்டுவதற்கான முக்கியச் சூட்சுமங்களைத்தான் இதில் பார்க்க இருக்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick