வெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்! - 1

புதிய தொடர்

லகெங்கும் கோலோச்சும் வெற்றிகரமான இயற்கை வேளாண் முயற்சிகள், வழிமுறைகள், இயற்கை வாழ்வியல்... போன்றவற்றை முன்னிறுத்தும் இயக்கங்கள் பற்றிய விழிப்பு உணர்வுத் தொடர் இது...

‘ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே-ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு
’- ஔவையார் எழுதிய நல்வழிப் பாடல் இது.
 
“ஆற்றின் கரையிலேயே இருப்பதால் செழிப்பாக வளரும் மரமும், அரசன் அறிய பெருமையாக வாழ்கிற வாழ்க்கையும்கூட ஒருநாள் அழிந்துவிடும். ஆனால், உழுது, பயிர் செய்து உண்டு வாழும் வாழ்வுக்கு நிகரான வாழ்க்கை வேறில்லை. வேறு எல்லா வகையான தொழிலிலும் தவறு உண்டு” என்று உழவுத் தொழிலை உயர்த்திப் பிடிக்கிறார், ஔவையார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick