மண்புழு உரம்... மாடித்தோட்டம்... நெகிழிக்கு மாற்று... பலன் கொடுத்த ‘இயற்கை’ பயிலரங்கு!

கூட்டம்

டந்த ஆகஸ்ட் 25-ம் தேதியன்று, காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில்... ‘இனியெல்லாம் இயற்கையே’ என்ற பயிலரங்கு நடைபெற்றது. பேரூராட்சிகள் இயக்ககம், ‘பசுமை விகடன்’, ‘ஹேண்ட் இன் ஹேண்ட் இன்குளூசிவ் டெவலப்மென்ட் சர்வீஸஸ்’ அமைப்பு மற்றும் கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய இக்கருத்தரங்கில் தமிழகம் முழுவதிலிருந்தும் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், தொண்டு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்... என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கருத்தரங்குக்கூடத்துக்கு வெளிப்புறம், பேரூராட்சியில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்கள், விளைபொருள்களிலிருந்து பிளாஸ்டிக்குக்கான மாற்றுப் பொருள்கள் தயாரித்தல், மாடித்தோட்டம் அமைத்தல், கழிவுப் பொருள்களிலிருந்து கலைப் பொருள்கள் தயாரித்தல், கரும்புச் சக்கையிலிருந்து தட்டுகள் தயாரித்தல்... போன்றவற்றை விளக்கும் வகையில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட மண்புழு உரம், மகளிர் குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட மூலிகைப்பொருள்கள், மூலிகைச்செடிகள், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் போன்றவையும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. வருகை தந்த அனைவரையும் வரவேற்று நவதானிய சுண்டல் மற்றும் 108 மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட சூப் கொடுத்து உபசரித்தனர், பேரூராட்சிப் பணியாளர்கள். சூழலுக்கு இசைவான மண் கோப்பையில் சூப் பரிமாறப்பட்டதில் பெருமகிழ்ச்சி அடைந்தனர், பார்வையாளர்கள். சூப் குடித்துப் பயணக்களைப்பு நீங்கிப் புத்துணர்வு பெற்றவர்களை, இருக்கை வரை அழைத்துச் சென்று அமர வைத்தனர், பேரூராட்சிப் பணியாளர்கள். இவர்களின் உபசரிப்பில் நெகிழ்ந்து போயினர், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள். கலைமாமணி கலை அறப்பேரவை கலைவாணன் குழுவின் பொம்மலாட்டம் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, குத்துவிளக்கேற்றப் பட்டுக் கருத்தரங்கு துவங்கியது. நிகழ்வில், தொடக்க உரை ஆற்றிய பேரூராட்சிகள் இணை இயக்குநர் மலையமான் திருமுடிக்காரி, “தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து நிகழ்ச்சி நடத்துவதை நாங்கள் ஒரு பாக்கியமாகக் கருதுகிறோம். எங்கள் பணிகளை இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு இந்த நிகழ்ச்சி உறுதுணையாக அமையும். இதுபோல அடுத்தடுத்து மண்டல வாரியாக நிகழ்ச்சிகள் நடத்த இருக்கிறோம். தமிழ்நாட்டில் 528 பேரூராட்சிகள் இருக்கின்றன. சுமார் ஒரு கோடி பேர் பேரூராட்சிப் பகுதியில்தான் வாழ்கின்றார்கள். பேரூராட்சிப் பகுதிகளில் குப்பை அள்ளுவது, குடி தண்ணீர் கொடுப்பது, தெருவிளக்கு அமைப்பது போன்றவைதான் பேரூராட்சியின் பணிகள் என்று அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick