லிட்டருக்கு ரூ.50 லாபம்... கல்செக்கு... காங்கேயம் காளைகள்... பாரம்பர்ய முறையில் எண்ணெய் உற்பத்தி!

பாரம்பர்யம்

முற்காலத்தில் அந்தந்த ஊர்களிலேயே கல்செக்கு அல்லது மரச்செக்கு மூலம் எண்ணெய் ஆட்டுவர். அப்படி ஆட்டிய எண்ணெயை நேரடி விற்பனை மூலமாகவோ அல்லது உள்ளூர் பலசரக்குக் கடைகள் மூலமாகவோ விற்பனை செய்து வந்தனர். அனைத்துத் தொழில்களிலும் நவீனம் நுழைய ஆரம்பித்த பிறகு, எண்ணெய் உற்பத்தியும் மிகப்பெரும் தொழிலாக உருவெடுத்துவிட்டது. அதன் விளைவு, நல்லெண்ணெய், கடலெண்ணெய் என ஒவ்வொரு எண்ணெய்க்கு முன்பும் வர்த்தகப்பெயர் ஒட்டிக் கொண்டது. அதனால், சிறு நகரங்கள், கிராமங்களில் இருந்த எண்ணெய் செக்குகள் நலிவடையத் தொடங்கின. ஒரு கட்டத்தில் பலரும் செக்குகளை மூடிவிட, வசதி படைத்த சிலர் இயந்திரங்கள் மூலம் எண்ணெய் ஆட்ட ஆரம்பித்தனர். கலப்பட பயம் காரணமாகப் பெரிய நிறுவனங்களின் எண்ணெயை விட உள்ளூரில் விற்பனை செய்யப்படும் எண்ணெய் மேல் என நினைத்தவர்கள், இத்தகைய இயந்திரச் செக்குகளுக்கு ஆதரவு அளிக்கத் தொடங்கினர்.

தற்போது பெருகி வரும் இயற்கை குறித்த விழிப்பு உணர்வு காரணமாகப் பாரம்பர்ய முறையில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்க்கு மவுசு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால், பலரும் மரச்செக்கு, கல்செக்கு போன்றவற்றை அமைத்து எண்ணெய் உற்பத்தி செய்ய ஆரம்பித்துள்ளனர். இப்படித் தயாரிக்கப்படும் எண்ணெய் வகைகளின் விலை, பெரிய நிறுவனங்கள் சந்தைப் படுத்தும் எண்ணெய் வகைகளின் விலையைவிட அதிகமாக இருந்தாலும்... உடல் நலன் மீது அக்கறை உள்ளவர்கள் வாங்கிப் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் பாரம்பர்ய முறையில் கல்செக்கு அமைத்து எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறார், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவகாமிநாதன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick