மருத்துவச் செலவுகளைக் குறைத்த மாடித்தோட்டம்! | Techie talks about his Terrace garden - Pasumai Vikatan | பசுமை விகடன்

மருத்துவச் செலவுகளைக் குறைத்த மாடித்தோட்டம்!

மாடித்தோட்டம்

“சாஃப்ட்வேர் கம்பெனியில வேலை பார்க்குறதால காலையில கிளம்பி ஆபீஸுக்குப் போனா, ராத்திரி பத்து மணிக்குத்தான் வீட்டுக்கு வர முடியும். ஆபீஸ் டென்ஷன், வீட்டு டென்ஷன்னு இருந்தாலும், நான் மன அமைதியோடு இருக்குறதுக்குக் காரணம் எங்க வீட்டுல இருக்குற மாடித்தோட்டம்தான்.

குறிப்பா மன அழுத்தத்தைக் குறைக்கிறதுக்காகத்தான் இந்தத் தோட்டத்தையே அமைச்சேன். இப்போ தோட்டத்தால எங்களுக்கு மருத்துவச்செலவும் குறைஞ்சுடுச்சு” என்று சிலாகித்துச் சொல்கிறார், சென்னை, பழைய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த கற்பகம். தொடர்ந்து பேசிய கற்பகம், “இப்போலாம் வியாதியில்லாத மனிதர்களைப் பார்க்கவே முடியலை. முன்னாடியெல்லாம், வயசான காலத்துலதான் வியாதி வரும். இப்போ கல்யாண வயசுல இருக்குற இளைஞர்கள்கூடக் கையில மாத்திரை டப்பாவோடு அலையுறாங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick