கடுதாசி: அட, விடுமுறை விவசாயி!

புதிய தொடர்களின் அறிவிப்பே, அமர்க்களமாக இருந்தது. மூன்று தலைப்புகளும் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன. அடுத்த இதழை வாங்கிப் படிக்கக் காத்திருக்கிறேன்.

-கே.மாலா, பனைமரத்துப்பட்டி.

கூட்டுப்பண்ணைத்திட்டம் வெற்றி பெற்றிருப்பதை வரவேற்கிறேன். இந்தத் திட்டத்துக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதைப் பார்க்கும்போது, மகிழ்ச்சியாகவே உள்ளது. ஆனால், முழுமையாக விவசாயிகள் இதில் பயன்பெற வேண்டும்.

-எம்.சிவா, திருச்சி.

ட, ‘விடுமுறை விவசாயி..!’ என்ற தலைப்பே அருமையாக உள்ளது. அந்த வகையில் நானும்கூட ஒரு விடுமுறை விவசாயிதான். வார இறுதி நாள்களில், தோட்டத்துக்குப் போய், வயலில் வேலை செய்தால்தான், அந்த வாரம் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. பாரம்பர்ய நெல் சாகுபடி செய்யும் விடுமுறை விவசாயி சுரேஷ்குமாருக்கு வாழ்த்துகள்.

-ஆர்.கே.சிதம்பரம், கோயம்புத்தூர்.

குறைந்த விலையில் மரக்கன்றுகள் கிடைக்கும், ‘கடியம்’ குறித்த தகவல் சொன்ன எங்கள் ‘மண்புழு மன்னாருக்கு’ தங்ககாப்புதான் போட வேண்டும். ஆந்திர மண்ணில் மூன்று நாள்கள் சுற்றி, பயனுள்ள விஷயங்களைச் சொல்லியுள்ளார். அதுவும், பல்ல வெங்கண்ணா என்ற மாற்றுத்திறனாளியின் வெற்றிக்கதை நம்பிக்கை அளித்தது. அடுத்த முறை, ஆந்திரா பக்கம் போனால், கடியம் போகாமல் வரமாட்டோம்.
 
-முனைவர் ஜெயலட்சுமி, ஸ்ரீபெரும்புதூர்.

த்திக்கடவு-அவிநாசித் திட்டத்தை அரசு விரைவில் செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் பரிந்துரையைக் கருத்தில்கொள்ள வேண்டும்.

-எம்.பழனிச்சாமி, அவிநாசி.

செறிவூட்டப்பட்ட மண்புழு நீரில், பலவிதமான நன்மைகள் உள்ளன என்பதை அறிந்தபோது, ஆச்சர்யமாக இருந்தது. எல்லாவற்றையும்விட, மண்புழு உரத்தொழில்நுட்பத்தை மக்களுக்காக வழங்கிய, ‘மண்புழு விஞ்ஞானி’ முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயிலை, வணங்கி மகிழ்கிறோம்.

-எஸ்.ஜே.குமார், வேப்பூர்.

முந்திரிச் சாகுபடி சம்பந்தமாக அருமையான விளக்கம் கிடைத்தது. இயற்கை உழவருக்குப் பாராட்டுகள்!

@மெய்கண்டான்

யற்கை விவசாயம் செய்பவர்களுக்கு வருமானத்தைவிட, நிம்மதிதான் அதிகமாகக் கிடைக்கும். பாச்சலூர் மலைப்பகுதியில் இயற்கை விவசாயம் செய்யும், தில்லைநாதன் இயற்கையுடன் ஒன்றிவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick