நீங்கள் கேட்டவை: ‘பல்ஸ் ஒண்டர்’ விளைச்சலைக் கூட்டுமா?

‘‘அண்மையில் ‘பல்ஸ் ஒண்டர்’ என்ற இலைவழி ஊட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டேன். இதை உளுந்து பயிருக்குத் தெளித்தால் நல்ல மகசூல் கிடைப்பதாகச் சொல்கிறார்கள். இந்த இடுபொருள், இயற்கையா செயற்கையா, இதைப் பயன்படுத்தும் விதத்தை விளக்கமாகச் சொல்லுங்கள்?’’

எம்.சாந்தி, திருவெண்ணெய்நல்லூர்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின், விஞ்ஞானி பதில் சொல்கிறார்.

‘‘கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின், பயிர் வினையியல் துறை பயறு வகைப் பயிர்களுக்குப் பேரூட்டச் சத்துகளையும், நுண்ணூட்டச் சத்துகளையும் வழங்கவல்ல பல்ஸ் ஒண்டர் (Pulse Wonder) என்ற இடுபொருளை (ரசாயனம்) கண்டுபிடித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள வேளாண் அறிவியல் நிலையங்கள், வேளாண் ஆராய்ச்சி மையங்களில், இந்த இடுபொருள் கிடைக்கும்.

பயறு வகைகளுக்கு, சத்துகளை அளிக்கும் டானிக்காக மட்டும் இல்லாமல், வறட்சி, பூச்சித் தாக்குதல் போன்றவற்றைத் தாங்கி நிற்கும் திறனையும் பல்ஸ் ஒண்டர் அளிக்கிறது. தமிழ்நாட்டில் ஆடிப்பட்டம், சித்திரைப் பட்டம் மற்றும் கோடைக்காலங்களில் பயிரிடப்படுகிறது. நெல் சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் நெல் அறுவடைக்குப் பின் உளுந்து விதைக்கப்படுகிறது. உளுந்து பயிர் பல்வேறு மண் வகைகளில் பயிராகிறது. அதிகக் களிப்புத் தன்மையுள்ள கரிசல் மண்ணில் உளுந்து நன்றாகப் பலன் கொடுக்கும். களர் மற்றும் உவர் மண்ணில் உளுந்து பயிர் சரியாக வளராது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick