பயிர்க் காப்பீட்டில் முறைகேடு... கொந்தளிக்கும் விவசாயிகள்! | Crop insurance of Furious farmers - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/03/2019)

பயிர்க் காப்பீட்டில் முறைகேடு... கொந்தளிக்கும் விவசாயிகள்!

பிரச்னை

யற்கைச் சீற்றங்களால் தங்களது பயிர்களை இழந்த விவசாயிகள், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பயிர்க்காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் இழப்பீட்டுத் தொகைக்காகக் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், மிகக்குறைவான பணத்தை மட்டுமே காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடாக வழங்குகின்றன எனக் குற்றம் சாட்டுகிறார்கள் விவசாயிகள். பயிர் பாதிப்பு அளவீட்டில் முறைகேடு செய்து நிர்ணயிக்கப்பட்ட தொகையை வழங்காமல் அலைய விடுவதோடு, பயிர் இழப்பீட்டுத்தொகையைத் தேர்தல் செலவுகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்று குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. இதுசம்பந்தமாக காத்திருப்பு போராட்டம் போன்ற பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் விவசாயிகள்.