ஆறு வழிச்சாலை அபாயம்! திகிலில் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள்... | six way road Tiruvallur Farmers in danger - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/03/2019)

ஆறு வழிச்சாலை அபாயம்! திகிலில் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள்...

பிரச்னை

சேலம்–சென்னை எட்டு வழிச்சாலை தொடர்பான சர்ச்சைகள் இன்னும் முடிவுறாத நிலையில்... ‘பாரத் மாலா’ என்ற திட்டத்தின் கீழ் சித்தூர் – தச்சூர் ஆறுவழிச்சாலைத் திட்டத்தை அறிவித்துள்ளது, மத்திய அரசு. திருவள்ளூர் மாவட்டம் வழியாக ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் வரை செல்லும் இந்த ஆறுவழிச்சாலைக்கு விவசாயிகள், பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த ஆறு வழிச் சாலை அமையவுள்ள பள்ளிப்பட்டு, பொன்னேரி மற்றும் ஊத்துக்கோட்டை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து... ‘திருவள்ளூர் மாவட்ட உழவர்கள் மற்றும் உழைப்பாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு’ என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளனர். இந்த அமைப்பின் சார்பில், கடந்த மார்ச் 9-ஆம் தேதி சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், விவசாயிகள் போன்றோர் கலந்து கொண்டு, தங்களது பிரச்னைகள் குறித்த விவரங்களைத் தெரிவித்தனர்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க