800 கோழிகள்... மாதம் ரூ. 50,000 லாபம்! - படித்துக்கொண்டே பண்ணை நடத்தும் இளைஞர்! | Profitable Chicken farming - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/03/2019)

800 கோழிகள்... மாதம் ரூ. 50,000 லாபம்! - படித்துக்கொண்டே பண்ணை நடத்தும் இளைஞர்!

கால்நடை

“நாட்டுக்கோழி வளர்ப்பு நல்ல வருமானம் கொடுக்குற தொழில்தான். ஆனால், நம்ம கவனம் முழுமையா இருக்கணும். கோழிகளை வாங்கி அடைச்சு, தீவனம் கொடுத்து வளர்த்தா முட்டை போடும். அடை வெச்சா குஞ்சு பொறிச்சிடும்னு மேம்போக்கா இருந்தா, நிச்சயம் கோழி வளர்ப்பு தோல்வியில்தான் முடியும். கோழிப்பண்ணை ஆரம்பிச்சா, முதல் வருமானம் பார்க்கக் குறைஞ்சது எட்டு மாசங்கள் ஆகிடும். இதைப் புரியாம பண்ணை ஆரம்பிச்சோம். வருமானம் கிடைக்கலைனு ரெண்டு மூணு மாசத்திலயே சிலர் பண்ணையை மூடிடுறாங்க. முழு ஈடுபாட்டோடு கவனமா செய்றவங்க நிச்சயம் நல்ல வருமானம் பார்க்கலாம். அதுக்கு நானே உதாரணம்” என்று தேர்ந்த அனுபவத்துடன் பேசுகிறார், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் வசந்தவேல்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க