பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - பயிர் நோய்களைப் பரப்பும் சாறு உறிஞ்சும் பூச்சிகள்! | Insects are our friends 2.0 - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/04/2019)

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - பயிர் நோய்களைப் பரப்பும் சாறு உறிஞ்சும் பூச்சிகள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

பூச்சி மேலாண்மை - 5

பூச்சிகளை... தாவர உண்ணிகள், ஊன் உண்ணிகள், மட்கு உண்ணிகள் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். பொதுவாக, நாம் பிரச்னைக்கு உரியவை என நினைப்பது தாவர உண்ணி வகைப் பூச்சிகளைத்தான். இந்த வகைப் பூச்சிகள், செடியின் எந்தப்பகுதியைச் சாப்பிடுகின்றன என்று கவனிக்க வேண்டியது அவசியம். பூச்சிகளின் வாயின் அமைப்பை வைத்து அவை செடியின் எந்தப்பகுதியைச் சாப்பிடுபவை என்று அறிய முடியும். இலைகளை மென்று தின்னும் பூச்சிகளில் ஒன்று வெட்டுக்கிளி. வாயிலுள்ள குழலை, செடிக்குள் செலுத்தி சாற்றை உறிஞ்சுபவை சாறு உறிஞ்சும் பூச்சிகள். அசுவினி, வெள்ளை ஈ, மாவுப்பூச்சி போன்றவை சாறு உறிஞ்சும் பூச்சி வகையைச் சேர்ந்தவை. தேனீ போன்ற சில பூச்சிகள் நக்கிச் சாப்பிடக் கூடியவை. இலைப்பேன் போன்ற சில பூச்சிகள் இலைகளின் நரம்புகளுக்கிடையே உள்ள திசுக்களை அறுத்துச் சாப்பிடக் கூடியவை. வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் அந்துப்பூச்சிகள் ஆகியவை உறிஞ்சிச் சாப்பிடும் பூச்சிகள். வீடுகளில் மொய்க்கும் ஈக்கள், இரை இருக்கும் பகுதியை வாய்மூலம் துடைத்து உண்ணும் பூச்சிகள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க