காவிரியைக் காவு கொடுத்த கட்சிகள்..! | M k Stalin Not Qualified To Speak On Cauvery Issue Tamil Nadu Cm K Palaniswami - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/04/2019)

காவிரியைக் காவு கொடுத்த கட்சிகள்..!

பிரச்னை

பொதுவாக ஒவ்வொரு தேர்தலின்போதும் அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளில் முக்கியமான ஜீவாதாரப் பிரச்னைகள் இடம்பெற்றிருக்கும். ஆனால், தமிழகத்தின் முக்கிய ஜீவாதாரப் பிரச்னையான காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்துத் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள் எந்தவொரு வாக்குறுதியையும் அளிக்கவில்லை. கிட்டத்தட்ட 40 ஆண்டுக் காலமாக இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இப்பிரச்னை குறித்து அரசியல் கட்சிகள் பேசாத நிலையில்... ‘இக்கட்சிகள் தமிழக விவசாயிகளுக்கு வெளிப்படையாகவே துரோகம் இழைக்கத் துணிந்துவிட்டன’ என்று கொதிக்கிறார்கள், காவிரி உரிமை மீட்புக்குழுவினர்.